திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழக இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒருவாரத்தில் அரை நாள் வீதம் ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்புகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்படுகின்றன.
அதற்கிணங்க, மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் 2 ஆவது குழு மதுரை, மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

இப்பயிற்சியின் தொடக்க விழாவில் மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியின் தாளாளர் வரதராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ம.சுசிலா நோக்கவுரையாற்றினார். தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் இரா.இரவி, தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதாளர் முனைவர் சண்முக. திருக்குமரன், நிலா இலக்கிய மன்ற நிறுவனர் கவிக்குயில் இரா.கணேசன், வள்ளலார் இயற்கை அறிவியல் மைய நிறுவனர் ஆதிரை சசாங்கன், திருக்குறள் கு.முருகேசன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் குறளடியான் (எ) கோபாலகிருஷ்ணன், மதுரை திருக்குறள் மன்ற செயலாளர் மு. அழகுராஜ், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதாளர் சுலைகாபானு, ஆடிவீதி திருவள்ளுவர் கழகப் பொருளாளர் சந்தானம், செந்தமிழ்க்கல்லூரியின் விரிவுரையாளர் அதிவீரபாண்டியன், தலைமையாசிரியர் ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மற்றும் இவ்விழாவில் தமிழறிஞர்கள். தமிழார்வலர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவில் மதுரை மணியம்மை மழலையர் பள்ளியின் ஆசிரியர் தஅஞ்சுகம் நன்றியுரையாற்றினார்.