நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் மைதானத்தில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் , மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்களுடன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். உடன் மண்டல தலைவர்கள் திருமதி. அகஸ்டினா கோகிலவாணி திரு.ஜவஹர் திரு.செல்வகுமார் திரு.முத்துராமன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மழைக்காலம் பறவைகள் பொது மக்கள் மழையையும் பொருட்படுத்தாது.
சர்க்கஸ்யின் சாகச காட்டிசிகளை காண ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

பல்வேறு வகையான சாகச காட்சிகளுடன், மயிர் குச்சரியும் அந்தரங்கத்தில் இடம் விட்டு தாவும் நிகழ்வுகள் மின் ஒளியில் நடந்தது. திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் விளக்குகள் அணைந்தபோதும். சர்க்கஸ் கலைஞர்களின் சாகச விளையாட்டு தொடர்ந்தது. இதை போன்றே இரும்பு உருளைக்குள் இருசக்கர வாகனம் ஓட்டம், மிருகங்கள் இல்லாத குறையை நாய்களும், குதிரைகள் போக்கின.
மயிர் குச்சரியும் பல்வேறு காட்சிகளை கண்ட பார்வையாளர்கள் கூட்டம்
சர்க்கஸ் கலைஞர்களுக்கு கை தட்டி அவர்களது பாராட்டை தெரிவித்தார்கள்
