புதுச்சேரியில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த பிரபல பாடகர் மனோ புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதையும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மணக்குள விநாயகரை பக்தி பரவசத்துடன் வழிபட்ட பாடகர் மனோவுடன் கோவிலில் இருந்த பக்தர்கள் செல்பி எடுத்தும் போட்டோக்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும் அவசர அவசரமாக மனக்குள விநாயகரை தரிசனம் செய்த அவர் விறு விறு என்று கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.