• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காவலர்களை மிரட்டிய குற்றவாளி கைது !!!

BySeenu

Jul 13, 2025
https://arasiyaltoday.com/namathu-arasiyaltoday-weekly-digital-magazine-18-07-25-15/

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 01/2021 u/s 9 r/w 10 of POCSO ACT 2012 & 506(2) IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் வழக்கு இறுதி கட்ட விசாரணைக்காக நீதிமன்றம் வந்த ரிஸ்வான், விசாரணைக்குப் பிறகு திடீரென அங்கு இருந்து ஓடி விட்டார். இதை அடுத்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் அவரை பிடிக்கச் சென்ற போது, அவர் கையில் பிளேடை எடுத்து, “என்னை யாராவது பிடிக்க வந்தால், கழுத்தை அறுத்து கொள்கிறேன்” என மிரட்டினார். மேலும், பிளேடை வாயில் வைத்து சுமார் 4 மணி நேரம் போலீசாரை தடுத்து வைத்தார்.

அவரது உயிர் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, போலீசார் அப்போது கைது செய்யாமல் விலகினர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அந்த POCSO வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரிமளா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் கொண்ட குழு ரிஸ்வானை தேடி புறப்பட்டனர்.

இந்த இதைத்தொடர்ந்து குற்றவாளி ரிஸ்வான் இருப்பிடம் கண்டு அறியப்பட்டது இதைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக பதுங்கிய நிலையில், அவரை தூரத்தில் இருந்து கவனித்து, எதிர்பாராத தருணத்தில் பாதுகாப்புடன் மடக்கி பிடித்த காவல் துறையினர். பாக்கெட்டில் இருந்து 10 பிளேடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றவாளியை எந்த வித காயமும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் சிரமப்பட்டு கைதுக்கான சட்ட காரணங்களை விளக்கி, முறையாக கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.