• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

ByKalamegam Viswanathan

Jul 9, 2025

சோழவந்தான் அருகே கல்லாங்காடு அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமணம் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றினார்கள்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளை செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், தலைமை தாங்கினார். மன்னாடி மங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி வரவேற்பு உரையாற்றினார்.

முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், பேரூர் துணைச் செயலாளர் தியாகு, ஜெயபிரகாஷ், விருகை தருமர், குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், உமா ஸ்ரீ, மாரி சுரேஷ், முத்துப்பாண்டி, அழகுமலை, தவமணி, திரிசங்கு மற்றும் மன்னாடிமங்கலம் தெற்கு வடக்கு கல்லாங்காடு கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

இதேபோன்று மற்றொரு நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரியில் அதிமுக சார்பில், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றினார்கள்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் பெரிய ஊர் சேரியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னாள் எம்எல்ஏக்கள், எம். வி. கருப்பையா மாணிக்கம் அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜா, வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், விருகை தருமர் மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர், ஆர்.பி. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் நாட்டாமை சுந்தர் ராகவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திரன் மணியன், அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி முன்னாள் செயலாளர் புதுப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் பாண்டுரங்கன், பெரிய ஊர் சேரி கிளைச் செயலாளர் முத்துராம், அலங்காநல்லூர் ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் கே. பாலமுருகன், முடுவார் பட்டி கே.கே. காமாட்சி, துணைச் செயலாளர் சந்திரன் ஜெயபிரகாஷ், குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், மகளிர் அணி உமா ஸ்ரீ மாரி, ரேவதி கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.