விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லியில் ஸ்ரீ அருள்மிகு அருள்தரும் ஐயப்பன் திருக்கோவில் உள்ளது.

இக் கோவில் கும்பாபிஷேக விழாவில் கெளரவத் தலைவர் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளருமான ராஜவர்மன் பக்தகோடிகளையும், தொழிலதிபர்களையும், பொதுமக்களையும், கழக நிர்வாகிகளையும் வருக! வருக! வரவேற்றார்.
இக் கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான எதிர் கோட்டை சுப்பிரமணியன்,

முன்னாள் அமைச்சர். இரா.தா. *இன்பத்தமிழன் மற்றும் விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், பிற அணி மாவட்ட செயலாளர்கள் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் , நகரக் கழகச் செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்,கிளைக் கழகச் செயலாளர், நிர்வாகிகள் பக்தர்களுடன் சேர்ந்து இக் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார்கள்.








; ?>)
; ?>)
; ?>)