ஜெயங்கொண்டம் ஒன்றியம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக “சாதனையளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் சார்பாக, அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் கூடுதல் திறன்களில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு “மாடர்ன் சாதனையாளர், முதலாம் ஆண்டு விருது” வழங்கும் விழா, மாடர்ன் கல்வி குழுமத்தின் நிறுவனர் / தாளாளர் முனைவர் சொ.பழனிவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. துணைத் தலைவர் லயன் எம்.கே.ஆர்.சுரேஷ் முன்னிலையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் J.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
ஜெயங்கொண்டம் ஒன்றியம் சுற்றுப்புற ஊராட்சிகளில் இருந்து பதினைந்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கல்வி பயின்று ஒட்டுமொத்தத் துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்கள் இவ்விருதிற்காக 35க்கும் மேற்பட்ட (இருபால்) மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர்களின் உழைப்புக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிற்கும் இது ஒரு நேர்மையான அங்கீகாரம் என பலரும் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் PM PUBLIC (CBSE) பள்ளியின் முதல்வர் G.விஜயசாரதி, நன்றி கூறி, மாணவர்கள் மேலோங்கி வளர கல்விக் குழுமத்தின் ஆதரவு என்றும் நிலைத்திருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கல்வியில் பின்தங்கிய (இருபால்) மாணவர்களை ஊக்குவிக்க “விருது வழங்கும், விழா” அரிய வாய்ப்பாக அமைந்தது.













; ?>)
; ?>)
; ?>)