இராஜபாளையத்தில் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில், சட்டத்திற்கு புறம்பாக வழிகாட்டு மதிப்பை கூட்டி பதிவு செய்கின்ற சார் பதிவாளரை கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கம் சார்பில், அரசு வழிகாட்டு மதிப்பை 30 சதவீதம் அதிகமாக எந்தவித அரசாணை இல்லாமல் இராஜபாளையம் சார் பதிவாளர் முத்துச்சாமி சொத்து மதிப்பு கூட்டி பதிய செய்ய வற்புறுத்துவதாகவும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ராமராஜ் அர்ஜுனன் ஆக இருவரையும் தனியாக நியமனம் செய்து அவர்கள் மூலம் பத்திரிக்கை சரிபார்த்து பின்பு பத்திரப்பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தும் தமிழக அரசு நில தரகர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டுமென பல்வேறு கோரிக்கையில் முன் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஐயப்பன் முன்னிலையில் வைத்தார். தொகுதி தலைவர் லட்சுமணன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
