நாகர்கோவிலில் இன்று மாலை (ஜூல_1)மாலை நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளரும், கேரள அரசின் முன்னாள் கல்வி அமைச்சருமான
எம்.எ.பேபி அவரது துணைவியருடன் சாமிதோப்பு அய்யாவழியின் பூஜித குரு பால பிரஜாபதி அடிகளாரை மரியாதை நிமித்தம் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இல்லத்திற்கு விருந்தினராக வந்த மேலாள் கேரள மாநிலத்தின் கல்வி அமைச்சர் எம்.எ. பேபி அவர்களிடம், பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் அய்யா வைகுண்டர் பற்றிய நூல் ஒன்றை வழங்கினார்.
கேரள மாநிலத்தின் மேநாள் கல்வி அமைச்சர் எம்.எ.பேபி
சுவாமிதோப்பில் செய்தியாளர்களிடம்,

அய்யா வைகுண்டர் கார்ல் மார்க்ஸ்,நாராயணகுருவுக்கும் முன்னோடி.
மக்களை அடக்கி ஆள்வதற்க்கு எதிராக குரல் கொடுத்தவர், அவர் கொண்ட கொள்கையில் அவரது இறுதி நாட்கள் வரை நிலைத்து நின்ற ஒரு சீர் திருத்த போராளி.
உலகம் முழுவதும் மக்களின் ஜனநாயகத்திற்காக போராடிய அனைவருடனும் ஒப்பிட்டு போன்ற தக்க பெருமகனார்.
சாமிதோப்பு அய்யா பிறந்த மண் அய்யாவின் நினைவை போற்றும் வண்ணம் இந்த பகுதிக்கு நான்காவது முறையாக வந்து, அந்த பெருமானுக்கு நினைவில் அஞ்சலி செலுத்துகிறேன் என தெரிவித்தார்.