நாகை நகரம், 33வது வார்டு கோட்டைவாசல்படி பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மிகுந்த புகைமூட்டம் காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசத்தில் நெருக்கு, கண்களில் எரிச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளானார்கள்.

இந்த தீ விபத்து ஏற்பட்டது அதிமுக வார்டு பகுதியில் என்றாலும், நகர்மன்ற தலைவர் திரு. மாரிமுத்து, எந்தவிதமான அரசியல் பாகுபாடும் இல்லாமல், நள்ளிரவிலேயே சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்தச் செயல்பாடு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தீ விபத்தைக் கட்டுப்படுத்த தீயணைப்பு துறையும் காவல்துறையும் மூன்று மணி நேரம் தொடர்ந்து போராடி, தீ பரவுவதை தடுத்தனர். திடீர் தீயால் ஏற்பட்ட புகை, அருகிலுள்ள வீடுகளில் நுழைந்ததால், மக்கள் சளி, இருமல், கண்களில் எரிச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது.
நகர்மன்றத் தலைவர் மக்கள் பாதுகாப்பையே முக்கியமாகக் கொண்டு, அதிகாரிகளுடன் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒரு மக்கள் பிரதிநிதியாகச் செயல்பட்டதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.