கோவை மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சமீப நாட்களாக பெய்துவந்த மழையின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், நிறைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.

இந்த நிலையில் கோவை ஆத்துப் பாலம் நெய்யலாறு, பெருக்கெடுத்து ஓடும் காளவாய் தடுப்பணை நிறைந்து, அதிலிருந்து தண்ணீர் வழிந்து அருவிபோல கொட்டுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த நிலையில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியலிட்டு மகிழ்கின்றனர்.
மேலும் எங்க கோயமுத்தூர் தண்ணீர் தேனுபோல இனிக்குதுங்கோ என்று கூறி ஆர்பரித்து வருகின்றனர். மேலும் இந்த காளவாய் தடுப்பணையை தூர்வாரி முறையாக பராமரித்தால் எதிர்காலத்தில் பொதுமக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
