• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,

BySeenu

Jun 29, 2025

கோவையில் 6 வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு பேக்கிங், உணவு தறிக்கும் இயந்திரங்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் சமீபத்திய தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்டுபிடிப்புகளைக் காணும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த கண்காட்சியில் HoReCa எக்ஸ்போவின் 10வது பதிப்பு (ஹோட்டல், ரெஸ்டாரன்ட் கேட்டரிங் & கஃபே), பேக்கர்ஸ் டெக்னாலஜி ஃபேரின் 16வது பதிப்பு, ஃபுட் & டிரிங்க் ப்ராசசிங் எக்ஸ்போவின் 4வது பதிப்பு, டெய்ரி பிராசசிங் எக்ஸ்போவின் 3வது பதிப்பு மற்றும் இந்தியா புட் பேக் எக்ஸ்போவின் 4வது பதிப்பு மற்றும் உணவு கருத்தரங்கம், கண்காட்சியானது கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

பி & எஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி. பிரியங்கா கார்திகேயன் செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

கண்காட்சி குறித்து சினெர்ஜி எக்ஸ்போசர்ஸ் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் மற்றும் துணைத் தலைவர் சசி குமார் ஆகியோர் கூறுகையில், இந்த நிகழ்வுகளில் இந்தியா முழுவதும் இருந்து 300 க்கும் மேற்பட்ட இடம்பெறுவார்கள் என்று குறிப்பிட்டனர்.
உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மொத்தமுள்ள 300+ கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய பிராண்டுகளுடன், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள், மேலும் புதிய தயாரிப்புக்களின் வெளியீடுகள் நடைபெற உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வை மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (MSME), அகில இந்திய உணவு பதப்படுத்துபவர்கள் சங்கம் (AIFPA), இந்திய உணவு சேவை ஆலோசகர்கள் சங்கம் (FSCAI), தென்னிந்திய சமையல்காரர்கள் சங்கம் (SICA) மற்றும் பல தமிழ்நாடு உணவு வழங்குபவர்கள் சங்கம் ஆகியவை ஆதரிக்கின்றன.