கோவை மாவட்டம், வால்பாறை பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தாய் கண் முன்னே கவ்விச் சென்றது.
நீண்ட தேடலுக்குப் பின்பு சிறுமி பாதி உடலுடன் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் வால்பாறையில் கூண்டு வைத்து இருந்தனர்.
இதனை அடுத்து இன்று காலை 5 மணி அளவில் சிறுத்தை கூண்டில் அகப்பட்டது. அந்த
சிறுத்தையை டாப் ஸ்லிப் அல்லது வரகளியார் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத் துறையினர் திட்டமிட்டதை அடுத்து சிறுத்தை மினி லாரி மூலம் வால்பாறையில் இருந்து ஆழியார், ஆனைமலை சேத்துமடை சாலை வழியாக கொண்டு சென்று டாப்சிலிப் அருகே உள்ள யானை குந்தி அடர்ந்த வனப்பகுதியில் கூண்டில் இருந்து பத்திரமாக திறந்து விடப்பட்டது.
சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து தப்பித்தோம், பிழைத்தோம் என வேகமாக சென்று அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.