• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,

ByPrabhu Sekar

Jun 26, 2025

தாம்பரத்தில் தமிழ்நாடு மதுபோதை மறுவாழ்வு மையம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை மாபெரும் விழிப்புணர்வு பேரணி சங்க பொருளாளர் டாக்டர் முருகன் தலைமையில் நடைப்பெற்றது. பேரணியை சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் சங்கீதா, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி தாம்பரம் மாநகராட்சியில் இருந்து பல்வேறு சாலைகள் வழியாக, சண்முகம் சாலையில் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் கலந்துகொண்டு போதைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

பேரணி குறித்து சமூக ஆர்வலர் குரானா கூறுகையில்,
மது போதையில் இருந்து விடிவிக்கவும் மது இல்லா தலைமுறையையும் போதையில்லா தலைமுறையையும் உருவாக்கும் விதமாக இந்த பேரணி இன்று நடைபெறுகிறது மது இல்லாத தலைமுறையை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் நாடு முழுவதும் இது போன்ற பேரணிகள் நடைபெறுகிறது. கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் கொண்டு வருவது மூலம் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் என்றார். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.