கிராம சுகாதார செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில் MLHP நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தடுப்பூசி பணியில் MLHP ஐ உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும். 4000க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயர்வதை தடுக்க முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். Online பதிவு பணிக்கு வேறு நபர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தமிழக முழுவதும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டைகளை அணிந்தவாறு மூன்றாவது நாளாக பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்று கருப்பு பேட்ஜ் கிராம சுகாதார செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தை ஈடுபட போவதாகவும் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் ஜூலை கோட்டையை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.