சர்வதேச சுற்றுலா பகுதியான,முக்கடல் சங்கமம் பகுதியில், சர்வதேச யோகா தினத்தின் ‘ முத்திரை’ சொல்லான ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் யோக செயல்முறை விளக்கம், கன்னியாகுமரியில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்ற நிகழ்வில் ஏராளமான இருபால் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று யோகாவின் பலவிதமான செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் மாணவ, மாணவிகள் பங்கேற்று மேற்கொண்ட யோக பயிற்சியினை. குமரி வந்துள்ள ஏராளமான பன் மொழி சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததோடு அமைச்சர் மனோதங்கராஜ், மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்கள் உடன்,உற்சாகமாக
போட்டிப் போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தேசிய மாணவப்படையினர் கலந்துக்கொண்டார்கள்.