• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Jun 21, 2025

ஸ்டாலின் திமுக ஆட்சி சக்கரம் சூழல்கிறதோ இல்லையோ அரசு பஸ்ஸின் சக்கரங்கள் துண்டாகி தனியே ஓடிக்கொண்டிருக்கிறது..

மதுரையில் இருந்து சென்ற அரசு பஸ் கடையநல்லூர் அருகே இரண்டு சக்கரங்கள் கட்டாகி ரோட்டில் ஓடி, பயணிகள் எல்லாம் காயமடைந்தனர். இந்த செய்தி இதுவரை நாம் பார்த்ததில்லை.

இதில் ஆட்சியினுடைய நிலை குறித்து நாம் விவாதிக்கிற போது இது ஒன்றே போதும். இந்த நிர்வாகத்தின் மீது இந்த அரசு எப்படி அக்கறை கொண்டு இருக்கிறது என்பதற்கு ஆட்சியின் சக்கரம் எப்படி செயல்பட்டு கொண்டிருப்பது இந்த பஸ்ஸின் சக்கரம் கழண்டு கிடப்பதே சாட்சியாக இருக்கிறது.

தமிழகத்தில் 20,800 பேருந்துகள் உள்ளது இதன் மூலம் நாள்தோறும் ஒரு கோடியே 25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இதில் பண்டிகை காலங்கள் மூலம் மூகூர்த்த காலங்கள் எடுத்துக் கொண்டால் கூடுதலாக 30 லட்சம் பேர்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நமக்கு கிடைத்த புள்ளிவிபரங்கள் கூறுகிறது.

கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சி மட்டும் 14,489 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது அதேபோல 7,000 போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டது, 2020 கொரோனா காலத்தில் எடப்பாடியார் 8மாதம் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கியது மட்டுமல்ல அது 10 சகவீத போனஸ்சும் வழங்கினார்.

இதே திமுக ஆட்சி எடுத்துக்கொண்டால் கருணாநிதி ஆட்சியில் 2006 முதல் 2011 வரை 3000 பேருந்துகள்தான் வாங்கப்பட்டுள்ளது அதேபோல் தற்போது நான்கு ஆண்டுகளில் 780 பேருந்துகள் வாங்கப்பட்டது என்ற கணக்கு கூறப்பட்டு வருகிறது இதை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்

கடந்த நான்காண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் எடப்பாடியார் தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தி வருகிறார், நிதி நிலையில் அறிவிப்புதான் வருகிறது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஒவ்வொரு ஆண்டும் 2,300டீசல் பேருந்து வாங்க போகிறோம், ஆயிரம் மின்சார பேருந்துவாங்க போகிறோம் என்று அறிவிக்கிறார்கள் அறிவிப்பு காகிதத்தில் தான் உள்ளது ஆனால் களத்தில் பேருந்து இல்லை.

பேருந்துகளை இயக்கி 9 ஆண்டுகள் முடிவில் 12 லட்சம் கிலோமீட்டர் ஓடினால் அந்த பேருந்து மாற்றம் செய்ய வேண்டும் ,அந்த அடிப்படையில் இதுவரை பத்தாயிரம் பேருந்துகள் வயது முதிர்ந்துள்ளன ஆனால் அந்த பேருந்துகளுக்கு எல்லாம் பெயிண்ட் அடித்து ஓட்டுகிறார்கள் .

அதனால் தான் மேற்குறை இல்லாமல் மழை நீர் எல்லாம் குற்றால அருவி போல கொட்டுகிறது பயணிகள் கொடை பிடித்து செல்லும் நிலை, படிக்கட்டு இல்லாத பேருந்து, சீட்டு இல்லாத பேருந்து, பிரேக் இல்லாத பேருந்து ,கிளட்ச் இல்லாத பேருக்கு ஓடுகிறது அதற்கு ஸ்டாலின் திமுக அரசு சப்பை கட்டுகிறது

தற்போது கூட பழுது பார்க்க போதுமான உபகரணங்கள் இல்லை 360 போக்குவரத்து பணிமனைகளில் 3000 மேற்பட்ட பராமரிப்பு துறை தொழில்நுட்ப பணியாளர் இடங்கள் காலியாக உள்ளது

அம்மாவின் ஆட்சியில் சேவை துறையாக இருந்தது,இதை லாப நோக்கத்துடன் பார்க்க கூடாது ஆனால் ஸ்டாலின் திமுக அரசு லாபம் பார்க்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இன்றைக்கு விடியல் பயணம் என்று சொல்லி மக்களின் ஆயுள் முடியும் பயணமாக இந்த திமுக அரசின் போக்குவரத்து பயணம் இருக்கிறதா என்கிற ஒரு அச்சம் இருக்கிறது .

ஆகவே திமுக ஆட்சியினுடைய ஆட்சி சக்கரம் சூழண்டு கொண்டிருக்கிறதா? இல்லை தூங்கி கொண்டு இருக்கிறதா? என கூறினார்.