இளம் தலைவர் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை யொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சினேகம் முதியோர் ஆதரவற்ற நிலையத்தில் மாநகர மகிளா சார்பில் மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா தலைமையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் முன்னிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் காலை உணவினை வழங்கினார். முன்னதாக முதியோர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.