கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன் அவர்களின் மகள் நட்சத்திர ஆகியோர் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு நடராஜன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்ப கஷ்டம் காரணமாக நடராஜனின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகள் நட்சத்திர அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழக்கமாக அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற போது நடராஜன் குடும்பத்தை அழைத்து பேசியுள்ளார். பின்னர் நட்சத்திர படிப்பதற்கு வசதி இல்லாமல் வேலை செல்லவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு இரவு 7 மணிக்கு அழைத்து நட்சத்திர படிப்பதற்கு அட்மிஷன் வாங்கி கொடுத்துள்ளார்.
இதில் சந்தோஷம் அடைந்த தாயார் ஜெயந்தி மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுது நன்றி தெரிவித்தார். பின்னர் நட்சத்திர படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.