• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை..,

BySeenu

Jun 20, 2025

கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரை, மாவூத்தம்பதி கிராம், மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த கௌதம் என்பவரின் ஆடு மற்றும் இரண்டு ஆட்டுக் குட்டிகள் இன்று சிறுத்தை கடித்து உள்ளது. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி அந்தப் பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறது.

சிறுத்தை தாக்குதல் நடந்த இடம் வனப்பகுதியில் இருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவித்து உள்ள வனத்துறை, ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை வேட்டையாடியதா ? அல்லது வேறு ஏதேனும் விலங்கு வேட்டையாடியதா ? எனவும், கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடும் மர்ம விலங்கால் அப்பகுதியின் அருகாமை உள்ள கிராமங்களில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வனத் துறையினர், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி, மர்ம விலங்கின் நடமாட்டங்களை தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை தீவிரப் பதித்து உள்ளனர்.