நாகை மருத்துவக்கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது வேதராண்யம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் செல்போனை பிடுங்கி தாக்குதல்; தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு செய்தியாளரின் செல்போனை பிடிங்கி உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் அட்டூழியம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் இவரது மனைவி வெண்ணிலா. வெண்ணிலா நேற்று தூக்கு மாட்டி இறந்தாக கூறப்படுகிறது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உடல் கூறாய்வு செய்து பிரேதத்தை அமரர் ஊர்தியில் ஏற்றி கணவர் முருகானந்தம் ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என கூறி அமரர் ஊர்தியை மறைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது வேதாரண்யம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் செய்தி எடுக்க வேண்டாம் என மிரட்டும் தொனியில் கூறினார். அப்போது சம்பவம் நடந்த இடத்தை கேட்ட போது, செய்தியாளரை ஒருமையில் பேசி செல்போனை பிடிங்கி தாக்கி கீழே தள்ளி விட்டார். அதை வீடியோ எடுக்க முயற்சித்த மற்றொரு செய்தியாளரின் செல்போனை உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் பிடிங்கி தரமறுத்து அட்டூழியத்தில் ஈடுப்பட்டார். பொது மக்கள் மத்தியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வேதாரண்யம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் , உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் தாக்குதல் நடத்தி செல்போனை பிடிங்கி அட்டூழியத்தில் ஈடுப்பட்டதை போராட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்களே போலீசாருக்கு எதிராக பொங்கி எழுந்தனர். மேலும் செய்தி எடுக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.