விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி, மக்காச்சோளம் பருத்தி,மற்றும் காய்கறி பயிர்கள் முழுமையாக அறுவடை பணிகள் முடிந்து விட்டது. தற்போது உழவு போடும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆனி மாத கடைசி வரை பெரும்பாலும் விவசாய பணிகள் கிடைப்பதில்லை.

ஆனால் வேலை இல்லாத சமயத்தில் மாற்று வழியில் ஈடுபட்டு அதன் மூலமும் ஊதியம் பெறலாம் என விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சூரர்பட்டி ,பந்துவார்பட்டி, ராமச்சந்திராபுரம் ,அச்சங்குளம், கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி ,உள்ளிட்ட காட்டுப் பகுதியில் வேலி மரங்களுக்கு இடையில் வளர்ந்துள்ள பிரண்டை செடிகளை பக்குவமாக பறித்து அதனை காயவைத்து கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்து ஊதியம் பெறுகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளி மாரியம்மாள் கூறியது
விவசாய நிலங்களில் சூரியகாந்தி, மக்காச்சோளம், மற்றும் காய்கறி பயிர்கள் முழுமையாக அறுவடை முடிந்து விட்டது. இனி பருவ மழை பெய்து கிணறுகளிலும் கண்மாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகமான பின்பு ஆனி மாதம் அல்லது ஆவணி மாதத்தில் தான் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெறும் அதுவரை இரண்டு மாதம் வேலை கிடையாது. ஐந்து ஐந்து நபர்களாக தனித்தனி குழுவாக நாங்கள் இரண்டு மாதத்தில் ஊதியம் பெறுவதற்காக காட்டுப்பகுதியில் தானாக விளைந்துள்ள பிரண்டை செடிகள் ஏராளமாக உள்ளன. அதற்கு தேவை இருப்பதால் முள்வேலிக்குள் வளர்ந்துள்ள பிரண்டை செடிகளை பக்குவமாக பறித்து அதனை வெயிலில் காயவைத்து வியாபாரிகளிடம் கிலோ பத்து ரூபாய் முதல் 20 வரை விற்பனை செய்கிறோம். இதன் மூலம் ஒரு நபருக்கு தினமும் 500 ரூபாய் முதல் 1000 , ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது என கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)