மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ. 8000.00 ஆக உயர்த்திய தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மகிழ்ச்சி..

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதிக்கு குறிப்பாக கிழக்கு பகுதியில் தடைகாலத்தில்,மேற்கு பகுதியில் தடை இல்லாத நிலையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் காலத்தில் பெரும்பான்மை மீன்பிடி தொழிலாளிகள் வேலை இல்லாது வருவாய் இல்லாத காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000.00 நிவாரணம் கடந்த ஆண்டு வரை அரசு வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தில் நிவாரண நிதியை ரூ.3000.00 அதிகரித்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மீன்பிடி தடைகால நிவாரண நிதியை ரூ. 8000.00 ஆக உயர்த்தி இன்று அறிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 47_மீனவ கிராமங்களில் உள்ள மீனவ குடும்பங்கள் தமிழக முதல்வருக்கு நன்றியுடன் வாழ்த்துகளையும் பொது வெளியில் உற்சாகமாக தெரிவித்தார்கள்.