• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி…

BySeenu

May 26, 2025

சர்வதேச சிலம்பம் கமிட்டி சார்பாக, சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சர்வதேச சிலம்பம் சங்கம் சார்பாக, ஐந்தாவது சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்றது.

முன்னதாக போட்டிகளின் துவக்க விழா இண்டர்நேஷனல் சிலம்ப கமிட்டியின் செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச சிலம்பம் கமிட்டி தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் மலேசியா,தாய்லாந்து,ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்கள் என ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீர்ர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

4 வயது முதலான பள்ளி மாணவர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை கலந்து கொண்ட இதில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் அசத்தலாக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளுக்கான துவக்க விழாவில் சர்வதேச சிலம்பம் கமிட்டி தமிழ்நாடு தலைவர் பாலமுருகன், தொழில் நுட்ப இயக்குனர் பாக்கியராஜ், தமிழ்நாடு பொருளாளர் சிவமுருகன், துணை தலைவர்கள் சூர்யா, வெற்றிவேல், நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.