சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாகவே உள்ளது.
வரும் டிச-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையிடலில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தைப் பார்த்துவிட்டு பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே.. இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன்.. படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்.. ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்.. ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான் என்று கூறினார்
இயக்குநர் சேரன் படம் பற்றி கூறும்போது, “சமூக அவலங்களை ,சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை, மனிதனுக்குள் மதம் புகுந்து எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை அருமையான படைப்பாக கொடுத்துள்ளார். ஒரு விமர்சகராக இருந்து இயக்குநராக அவர் எடுத்திருக்கும் அற்புதமான, மிகச்சிறப்பான முயற்சி இது” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,
இந்தப்படத்தை 18 நாட்களில் எடுத்துள்ளார்கள் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. மதம் எந்த அளவுக்கு மனிதத்தைக் கொல்கிறது என அப்படியே தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் உணர்த்தியுள்ளார் மாறன்.அதேசமயம் எந்த ஒரு சாராரைப் பற்றியும் குறிப்பிடும் படமாகவும் இது உருவாகவில்லை.
இசையமைப்பாளராகவும் மாறி இப்படத்திற்கு தேவையான பின்னணி இசையையும் சரியாகக் கொடுத்துள்ளார்.. இந்தப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. படம் எல்லாராலும் பெரிதும் ரசிக்கப்படும்” என்றார்.
ப்ளூ சட்டை மாறன் பேசும்போது, “இந்த படத்தைப் பார்த்துவிட்டு உங்களது குறை நிறைகளை சொல்லுங்கள் என்று பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் ஆகியோரிடம் கேட்டேன் ஆனால் படம் பார்த்துவிட்டு, சொல்வதற்கு குறை என ஒன்றுமே இல்லை என கூறிவிட்டார்கள்.
குறிப்பாக இயக்குர் இமயம் பாரதிராஜா என்னை பார்க்கும்போதெல்லாம் நீ ஒரு படம் எடுடா, உன் படத்தை நான் விமர்சிக்கிறேன் என்று கூறுவார்.. ஆனால் இப்போது விமர்சிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று படத்தை பாராட்டியுள்ளார் கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. இயக்குநர் சங்கத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். ரசிகர்களிடமிருந்தும் இதேபோன்ற பாராட்டு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.













; ?>)
; ?>)
; ?>)