• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.,

BySeenu

May 17, 2025

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 945 வாகனங்களை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆய்வு நேரில் ஆய்வு செய்து ஓட்டுனர்களிடம் வாகனங்களை எவ்வாறு ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் மீதமுள்ள 526 வாகனங்களை நாளை ஆய்வு செய்ய தயார் நிலையில் உள்ளது.

தொடர்ந்து முதலுதவி பெட்டி, Front and Back Camera, அவசர கதவு, பள்ளி
குழந்தைகளின் பேக் ராக், Back Sensor, தீயணைப்பு கருவி போன்றவற்றை வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா ? என்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீயணைப்பு துறையினர் பள்ளி வாகனம் ஓட்டுநர்களுக்கு தீ விபத்து குறித்து தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் ஓட்டுனர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பேருந்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

பின்னர் இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கூறுகையில்:-

பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் ஓட்டுனர்களுக்கு உரிய வழிகாட்டு விதிமுறைகளை எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் அதிவேகமாக வாகனங்கள் இயக்குபவர்கள் மீது தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கோவை மாவட்டத்தில் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் பள்ளி வாகனம் ஓட்டுனர்களுக்கு மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக் கூடாது, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என்றும் செல்போன் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக தெரிவித்தார்.