• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சி வழக்கிற்கு இன்று தீர்ப்பு..,

BySeenu

May 13, 2025

மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட இரடும் வன்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை , உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். அதில் குறைந்தபட்ச தண்டனையை 20 ஆண்டுகள் உள்ளன. 12 மணிக்கு தண்டனை விபரங்கள் வழங்கப்படும் என கூறி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிசீலனையை வைத்து இருக்கிறோம்.

எதிர்தரப்பினர் என்ன கோரிக்கை வைத்து உள்ளனர் என கேட்கும் போது,

இளம் வயதினர், குற்றவாளிகளுக்கு வயதான பெற்றோர்கள் உள்ளனர், குடும்பத்திற்கு ஒரே மகன் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து உள்ளனர். இதில் சிறப்பம்சம் எதுவும் இல்லை. இது இயல்பான அனைத்து தரப்பில் இருந்தும் வைக்கப்படும் கோரிக்கைதான். அரசு தரப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என நம்புகிறோம் என்று கூறினார்.

ரகசிய விசாரணை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கு எவ்வளவு சவாலானது என்ற கேள்விக்கு,

முதலில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படுகிறது, அதன்பிறகு 20 நாட்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு மாற்றப்படுகிறது. அதன் பிறகு 40 நாட்களில் சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்படுகிறது. மூன்று மாத காலத்திற்குள் மூன்று ஏஜென்சிகளுக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ க்கு வழக்கு மாறியதும், எந்தப் பெண்ணும் இதில் புகார் கொடுக்க முன் வராததால், சி.பி.ஐ குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரை அரசு தரப்பில் இருந்து 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை, அனைத்து பெண்களும் பயமின்றி சுதந்திரமாக வந்து சாட்சி சொல்லி இருக்கிறார்கள்.

வழக்கை நிரூபிப்பதற்கு மின்னணு கருவிகளின் சாட்சியங்கள், மிக முக்கியமானவையாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவே அதுதான் முக்கியமாக இருந்தது. வீடியோ எடுக்கப்பட்ட தேதி இடங்கள் அனைத்தும் தெளிவாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

சாட்சிகள் அளிக்கப்பட்டதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,

அளிக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும், தரமான முறையில் ரெட்ரீவ் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு இருக்கிறோம். இது டெக்னிக்கல் சப்போர்ட், மிகவும் நன்றாக இருந்தது.

ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்விக்கு?

அதுதான் உச்சபட்ச தண்டனையாக நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். நீதிமன்றம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்தார். பெண்களுடைய வழக்கு, இதே போன்ற பாலியல் வழக்குகளை உதாரணமாக உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக் கூறி இருக்கிறோம். இது போன்ற வழக்குகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, எங்கள் பக்கத்தில் இருந்து கடுமையான பாதங்களை வைத்து இருக்கிறோம்.

செய்தியையும் கடுமையான முயற்சி மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் கூறினார்.

https://we.tl/t-gRrlTFpvln