நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.05.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் காதொலிக்கருவி வழங்கப்பட்டன. வட்ட வழங்கல் துறை சார்பாக, பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.








; ?>)
; ?>)
; ?>)