• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?

Byமதி

Dec 5, 2021

விஜய் சேதுபதி – அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தினை ஏ.எல் விஜய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் ஏ.எல் விஜய் ஒரு புது படத்தில் இணைய உள்ளனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் மீண்டும் அனுஷ்கா தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘நிசப்தம்’ ஓடிடியில் வெளியானது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘தெய்வத்திருமகள்’, 2012 ஆம் ஆண்டு வெளியான ‘தாண்டவம்’ படங்களில் விஜய் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.