• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிடா முட்டு போட்டி…

ByKalamegam Viswanathan

May 10, 2025

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நேற்று கிடாய் முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன. இந்நிகழ்ச்சிக்கு கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, கர்ணன், சதீஷ், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி நிர்வாகிகள் பவித்திர பால்பாண்டி, கேப்டன் அப்பாசாமி ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் எம்எல்ஏ கதிரவன் கிடா முட்டு போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்த கிடாய் முட்டு சண்டையில் கல்புளிச்சான்பட்டி மற்றும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் கலந்து கொண்டன. கலந்துகொண்ட கிடாய் களுக்கு கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. விக்கிரமங்கலம் போலீசார் உள்பட 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடாய் முட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டினை கண்டு ரசித்தனர். விக்கிரமங்கலம் கால்நடை மருத்துவர் தலைமையில் கால்நடை மருத்துவக்குழுவினர் போட்டியில் கலந்து கொண்ட கிடாய்களை பரிசோதனை செய்தனர்.