• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல்..,

ByM.JEEVANANTHAM

May 9, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மணல்மேடு அருகில் வரிச்சு குடியைச் சேர்ந்த அறிவழகன் மகன் திலீப் என்ற திலீப் குமார் அத்தூரை சேர்ந்த மாணிக்கத்திற்கு 624 மது பாட்டில்களை இரண்டு சக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் மதுவிலக்கு காவல்துறையினர் மணல்மேட்டில்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பேது கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வந்த திலீப் குமாரை கைது செய்து மது பாட்டில்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.