மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரண்டாம் எழுதிய மாணவ, மாணவிகளின் 93.25%பேர் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 53 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். ஆண்களில் 4633 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4218 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மாணவிகளில் 5419 பேர் தேர்வு எழுதிய நிலையில் 5155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 10052 பேர் தேர்வு எழுதிய நிலையில் 9,373 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், ஆண்களில் 91.04 சதவீதம் பேரும், பெண்களில் 95.13 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 93.25 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 92.38% என்ற நிலையில், இந்த ஆண்டு ஒரு சதவீதம் கூடுதலாக தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 33வது இடத்தில் தேர்ச்சி சதவீதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர்களை விட மாணவிகள் நான்கு சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.




