• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

ByS. SRIDHAR

May 3, 2025

பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்ணை ஊராட்சி பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு அணியில் புதிய விளையாட்டு வீரர்களை இணைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளும், பொதுமக்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பூத் நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. குறிப்பாக பூத் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ID CARD, தொப்பி, அதிமுக துண்டு அனிந்து வரிசையாக உட்கார்ந்திருந்தது கண்போரை கவர்ந்தது.

இந்த நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் முத்தமிழ்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், நார்த்தாமலை ஆறுமுகம், மாநில MGR இளைஞரணி துணை செயலாளர் MTR.தமிரசன், IT WING மண்டல செயலாளர் மணிகண்டன், IT WING மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.