திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன். விவசாயியான இவர் தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை பால் கறவை முடிந்த பின்பு ஒன்றை வயது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டு உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கன்று குட்டி தவறி கிணற்றுக்குள் விழுந்தது. முத்துச்செல்வன் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கயிற்றின் மூலமாக கிணற்றுக்குள் இறங்கி நீரில் தத்தளித்து கொண்டிருந்த கன்று குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஒன்றை வயது கன்று குட்டியை உயிருடன் மீட்டுக் கொடுத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு பகுதி விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.