ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் : குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் முழக்கமிட்டனர்

நாகப்பட்டினம் மாவட்ட இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற வழிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் ஆளுநர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
நாகை அபிராமி அம்மன் திடலில் மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடியுடன் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.







; ?>)
; ?>)
; ?>)