• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சங்கரா மருத்துவமனையில் நவீன லாசிக் லேசர் மையம்..,

BySeenu

Apr 25, 2025

கோவை சிவானந்தபுரத்தில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் நவீன லாசிக் லேசர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார்.

விழாவுக்கு சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் ஆர். வி.ரமணி தலைமை தாங்கி பேசுகையில், மே மாதம் சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா 49-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. வானவில் திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டுக்குள் இந்த அறக்கட்டளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் கண் பார்வையை இலவசமாக பரிசோதித்து, தேவைப்படும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

சங்கரா கண் மருத்துவமனையின் 14-வது மருத்துவமனையை பிரதமர் மோடி வாரணாசியில் திறந்து வைத்தார். அவரதுஅறிவுறுத்தலின் பேரில் மேலும் ஒரு கண் மருத்துவமனை பீகார் மாநிலம் பாட்னா நகரில் தொடங்கப்படும். இந்த அறக்கட்டளை இதுவரை 1 கோடிக்கும் மேலான மக்களின் கண் பார்வையை சரி செய்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. அறக்கட்டளை தலைவர் சஞ்சய் டட்டா இந்த மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு வந்தபோது அதன் சேவைகளை கண்டு வியந்து தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார் என்றார்.

சங்கரா அறக்கட்டளை கருவிழி மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணரும், தொழில்நுட்ப துறையின் இயக்குனருமான டாக்டர் ஜே.கே.ரெட்டி பேசுகையில், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் லாசிக் லேசர் மையத்தில் ஜெர்மன் நாட்டின் ஸ்க்விண்ட் அமரிஸ் 1050 ஆர்.எஸ்.ரக உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது என்றார். இதில் சங்கரா கண் அறக்கட்டளை இந்தியாவின் தலைவர் டாக்டர் எஸ். வி.பாலசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.