மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை தலைவர் முனைவர்.வேளாங்கண்ணி ஜோசப் மீது அவருடைய ஆராய்ச்சி மாணவர் சிவசுப்பிரமணி என்பவர் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆராய்ச்சி மாணவர் சிவ சுப்பிரமணியம் கூறும் குற்றச்சாட்டில் தான் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர் என்பவதால் . இளைஞர் நலன் மேம்பட்டு துறை தலைவர் வேளாங்கண்ணி ஜோசப்பிடம் தன்னை Ph.D மாணவராக சேர்த்துகொள்ள அணுகிய போது, பகிரங்கமாக தன்னுடைய ஜாதியை என்னவென்று கேட்டிருக்கிறார். அப்போது அவருடைய உள்நோக்கம் தெரியாமல் தான் ஒரு sc வகுப்பை சார்ந்த மாணவர் என்று தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சிவசுப்பிரமணியத்திற்கு ராஜீவ் காந்தி ஃபெல்லோஷிப் கிடைக்காமல் இருக்க பல்வேறு வகைகளில் தொல்லைகளை கொடுத்து வந்திருக்கிறார்.
சிவசுப்பிரமணியம் Ph.D முடிக்க வேண்டும் என்றால் தனக்கு 5 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார். தான் இந்த பேராசிரியர் வேலைக்கு வருவதற்கு 25 லட்சம் கொடுத்ததாக கூறி இருக்கிறார்.
ஆகவே 5 லட்சம் பணம் கொடுத்தால் தான் Ph.D முடித்து தருவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
மேலும், சிவசுப்பிரமணிக்கு கிடைக்கவேண்டிய ராஜிவ் காந்தி ஃபெலோசிப் தொகையை கிடைக்க விடாமல் சதி செய்கிறார்.
அவருடைய ATM கார்டையும் பின் நம்பரையும் கேட்டு தொல்லை செய்திருக்கிறார். ராஜிவ் காந்தி (கல்வி உதவி நிதி)|பெலோசிப் தொகையில் பங்கு தர மறுத்ததால் பேராசிரியர் வேளாங்கன்னி ஜோஸப் ,தான் ஒரு ஆசிரியர் என்பதை மறந்து ப்ரோக்கர் போல செயல்பட்டு அந்த மாணவருக்கு ஃபெலோசிப் கிடைக் காதபடி சதி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பது தற்சமயம் தெரியவந்துள்ளது. அங்கு பணிபுரியும் ஒரு பெண் ஆசிரியர் ஒருவர் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை கொடுத்திருக்கிறார்.
ஆனால் பல்கலை கழக பதிவாளர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.கடந்த 27.03.2025 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த கல்வி பேரவை கூட்டத்தில் இவர் மீது திடுகிடும் புகார் ஒன்றை பொருளியல் துறை பேராசிரியர் சதாசிவம் அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக கூறினார்.
அதில், UGC விதிகளை மீறி வேளாங்கன்னி ஜோஸப் 5 பல்கலைக்கழகங்களில் Guideship வைத்திருப்பது அம்பலமானது. மேலும், இவர் குறிகிய காலத்தில் எப்படி 25 மாணவர்களுக்கு மேலாக Ph.D ஆய்வு வழிகாட்டியாக இருந்து முடித்து கொடுத்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
இவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தி தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
மாறாக, இவருக்கு .அடுத்த சில நாட்களில் சிறப்பு அதிகாரி பதவி வழங்கி கௌரவிதுள்ளது மதுரை காமராஜர் பல்கலை நிர்வாகம்.
கடந்த சில வருடங்களாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெண் ஊழியர்கள் பேராசிரியர்களுக்கு பாலியல் கொடுமைகள் நடைபெற்றது. தற்போது ஜாதிய வன்கொடுமைகளில் படித்த பேராசிரியர்கள் ஈடுபடுவது ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பல்கலை மாணவர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.