• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவை மத்திய ஏகாதி பத்தியத்திடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடி..,

ByG.Suresh

Apr 21, 2025

சிவகங்கை மாவட்டம்சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டுஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில்நகர மன்றத் தலைவர் துரை. ஆனந்த்அரசு வழக்கறிஞர் ஆதி அழகர்சாமி ஆகியோர் முன்னிலையில்மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நாஞ்சில் சம்பத் உரையாற்றும்போது “தமிழக முதல்வரின் பல சாதனையை எடுத்துரைத்தார்.குடும்பத்தை நடத்த பெண்கள் சுமையை அறிந்துநமது முதல்வர் பெண்களுக்காக மகளிர் விடியல் பயணம் திட்டம்,மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைகின்றனர். முதல்வரின் உன்னத திட்டத்தால்.ஆயிரத்தில் ஒருத்தி என்பது அந்தக் காலம் ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம்.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ செல்வங்கள் 17லட்சம் பேருக்கு இன்று காலைஉணவு வழங்கி வருகிறார்.

கோடிக்கணக்கான முதலீடுகளை வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வருகிறார்.புதுமைப்பெண் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தினமும் ஒவ்வொரு சாதனைகளை செய்து வருகிறார் நமது முதல்வர்.சிறப்பான ஆட்சியை செய்து வரும் கழக ஆட்சியை அப்புறப்படுத்திட ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.குழந்தைகள் கட்டாயமாக இந்தி கற்றால் தான் 2000 கோடிக்கு மேல் தர முடியும் என நிபந்தனை விதிக்கின்றனர். ஒன்றிய அரசு. மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் நெருக்கடி தருகிறார்.

இந்திய படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம் என்கிறோம் நாம் யாருக்கும் தடையாக இல்லை.ஆனால் திமுக அரசை அகற்ற வேண்டும் என கங்கணம் கட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துளளதுபாஜக. எடப்பாடி என்றஎருமை மாட்டை வலை பிடித்துநிர்பந்தத்தை தந்து கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.நேற்று எடப்பாடி சசிகலாவின் காலில் விழுந்து கிடந்தார் இன்று அமித்ஷாவின் காலில் விழுந்து கிடக்கிறார்.சசிகலாவின் காலை விட அமித் ஷாவின் கால் நன்றாக உள்ளது என கூறுகிறார் எடப்பாடி.

சொந்த காலில் நிற்க முடியாத சோற்றால் அடித்த பிண்டம் எடப்பாடி.மாநில அளவில் மக்களிடம் முன்னுரிமை பெற்ற கட்சியை டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு அடகு வைத்து விட்டார் எடப்பாடி.வருகின்ற காலம்ஆபத்து நிறைந்ததாக அறைகூவல் நிறைந்ததாக உள்ளது. எனவே நாம்2026 வரைஒரு பிரச்சார யுத்தத்தை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஹிட்லரை அன்று ஒருஜோசப் ஸ்டாலின் வீழ்த்தினார்.இன்று மோடி என்றநமது தளபதி ஸ்டாலின் வீழ்த்துவார்என்ற நம்பிக்கை நம் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் அதில் வெற்றியும் பெற வேண்டும், அதானி |அம்பானி குழுவினர்களுக்குஇந்தியாவின் செல்வ வளங்களை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு என உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன்,சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகையும் கேடயமும் வழங்கப்பட்டது தொடர்ந்து 1072 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.