• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை…

ByR. Vijay

Apr 17, 2025

மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் முடி காணிக்கை செலுத்தி, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவத்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணியில் பேட்டி..,

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வழிபாடு செய்தார். முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரியில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்த மத்திய மீன்வள இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேராலயத்தில் முடிகாணிக்கை செய்து, திருத்தல பேராலயத்தில் மெழுகுவற்றி ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தார். ஆவே மரியா அலுவலகத்திற்கு சென்று பேராலய அதிபர் இருதயராஜ் அவர்களை சந்தித்து பேசினார்.