• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எஞ்சின், ஜிபிஎஸ், செல்போன், மீனை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

ByR. Vijay

Apr 17, 2025

நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி எஞ்சின் ஜிபிஎஸ் செல்போன் மீன் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி உள்ளிட்ட நான்கு பேர் கடலில் கோடியக்கரை வடக்கே 16 கடல் மயில் தொலைவில் மீன் பிடித்திருக்கும் போது, இலங்கைச் சென்ற அதிவேக ஃபைபர் படகில் வந்த அடையாளம் தெரியாத இலங்கை கடல் கொள்ளையர்கள் படகை சுற்றி வளைத்து கழுத்தில் கத்தியை வைத்து, படகில் இருந்த இரண்டு என்ஜினில் ஒரு இஞ்சின், 30 கிலோ மீன், இரண்டு செல்போன், பேட்டரி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். இன்ஜினில் குறைந்த அளவு பெட்ரோலை வைத்து கரை திரும்ப முடியாமல் கடலில் மேம்படுத்திக் கொண்டிருந்த சக மீனவரிடம் எரிபொருள் வாங்கி கரை திரும்பினார். மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் பொருள்களை பறிகொடுத்த நிலையில் மீண்டும் கடல் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், மாதத்தில் இரண்டு, மூன்று முறை கடல் கொள்ளையர்களால் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும் மீனவர்கள், கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க சுதந்திரமாக தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மீண்டும் கடலில் தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.