• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மீண்டும் சொந்த குரலில் டப்பிங் பேசும் நயன்தாரா

Byமதி

Dec 2, 2021

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் நயன்தாரா. இதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், “கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் டயலாக்ஸ் நீயே டப் பண்ணிறது மிகுந்த சந்தோஷம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.