மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய ஊரக வேலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்தும், ராமேஸ்வரத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று கருப்பு பேட்ச் அணிந்தும், கருப்பு கொடிகளை கையில் ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான கண்டன கோஷங்களையும் போராட்டத்தின் போது எழுப்பினர். போராட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.