மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென வாடிப்பட்டி அலங்காநல்லூர் பிரதான சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. தற்காலிகமாக வாகனத்தில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது மக்கள் தற்காலிக குடிநீர் எங்களுக்கு வேண்டாம் நிரந்தர குடிநீர் தான் எங்களுக்கு வேண்டும் என அந்த வாகனத்தை திருப்பி அனுப்பினர்.
பொதுமக்கள் கூறுகையில்,
சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக அடிப்படைத் தேவையான குடிநீர் எங்களுக்கு வரவில்லை இதனால் நாங்கள் அதிக அளவு பாதிக்கப்படுகிறோம். பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு சரியான நேரத்திற்கு இந்த குடிநீர் பிரச்சினையால் அனுப்ப முடியவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலர் கவிதாவிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு மாறாக குழாய் வரி செலுத்துங்கள் குடிநீர் வரி செலுத்துங்கள் அவ்வாறு வரி செலுத்தினால் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் என மெத்தனமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.
குடிநீர் பற்றாக்குறையால் இங்கு குடிநீர் பிரச்சனை இல்லை ஊராட்சி செயலர் மெத்தன போக்கால் தான் எங்களுக்கு 10 நாளாக குடிநீர் சுத்தமாக வரவில்லை. ஆகவே எங்களுக்கு ஊராட்சி செயலர் தேவையில்லை. ஊராட்சி செயலரை மாற்று வேண்டும் என கிராம பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர்.
சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர்வழங்கவில்லை எனக் கூறி ஐம்பதுக்கும்
மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.







; ?>)
; ?>)
; ?>)
