100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஊதிய தொகை ரூ 4034 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக. நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக ஒன்றியம் திமுக சார்பில் சிக்கல் கடைத் தெரு. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் என்.ஆனந்த நிர்வாகிகள் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி நான்கு மாதமாக ஊதியம் கிடைக்காத பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழகம் வெற்றி பெறும் என உறுதிமொழி ஏற்றனர்.