• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர்..,

ByR. Vijay

Mar 24, 2025

நாகையில் மூன்று மாதங்களாக குப்பைத்தொட்டியில் கிடந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர்

நாகப்பட்டினம் புத்தூர் சிவன் கோவில் பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து அவ்வப்போது அங்கே உள்ள குப்பைத்தொட்டியில் கிடக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் உள்ள பாரதிமோகன் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த இளைஞரை குப்பைத்தொட்டி பகுதியில் நின்ற அவரை அழைத்து முடி திருத்தம் செய்து புத்தாடை அணிவித்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்கிருந்து காவல்துறையின் அனுமதியோடு திருவாரூரில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மூன்று மாதங்களாக குப்பைத்தொட்டியில் கிடந்த உணவை சாப்பிட்டு வந்த ஒரிசா மாநில இளைஞரை மீட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.