குமரியை சேர்ந்த ஜெயசீலன் (76) பெங்களூரில் நடந்த 45_வது மூத்தோர் தடகள போட்டியில் 400_மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று, மேயர் மகேஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
பெங்களூரில் நடந்த 45-வது மூத்தோர் தடகள போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் (வயது 76) பங்கு பெற்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்க பதக்கமும், போல் வால்டில் வெள்ளி பதக்கமும், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அவர் இன்று (மார்ச்_20)ல் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்களை சந்தித்து பதக்கமும் சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உடன் இருந்தனர்.
