பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தமிழக அரசை கண்டித்தும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.