மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கரூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் குதிரை ரேக்ளா போட்டியை முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சின்னச்சாமி,சிவபதி ஆகியோர் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ் என்கிற முத்துக்குமார் தலைமையில் குதிரை ரேக்ளா போட்டியை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி, சிவபதி ஆகியோர் குதிரை ரேக்ளா போட்டியை கொடியேசித்து துவங்கி வைத்தார்.
இதில் புதிய குதிரை, சிறிய குதிரை, பெரிய குதிரை ஆகிய மூன்று பிரிவுகளில் 85 ரேக்ளா குதிரை வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

இந்த ரேக்ளா குதிரை வண்டி போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.