தலைஞாயிறு அருகே 100 ஏக்கர் எள் சாகுபடி மழையால் பாதிப்பு:- இன்சூரன்ஸ் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்:- இன்சுரன்ஸ் பணம் கட்டுவதற்கு வேளாண்மைத் துறையினர் அலைக்கழிப்பு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியப்பட்டினம் பிர்கா தலைஞாயிறு பிளாக் உம்பளச்சேரி ஊராட்சியில் சம்பா அறுவடை பணி முடிந்து விவசாயிகள் சுமார் 100 ஏக்கருக்கு எள் விதைப்பு செய்திருந்தனர் 20 நாட்கள் ஆன நிலையில் நன்கு முளைத்து வளர்ந்து இருந்த நிலையில் தற்போது கடந்த மூன்று தினங்களாக பெய்த தொடர் கனமழையினால் எள் வயல்களில் மழை நீர் தேங்கி எள் செடிகள் பாதிப்பு ஏற்பட்டு வேர்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது .

இதனால் இந்த ஆண்டிற்கான எள் சாகுபடி முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் வேளாண்மை துறையினர் எள் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்கு அலை கழிப்பதாகவும் இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் அதுபோல் இன்னும் இரண்டு ஒரு நாட்கள்தான் இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்கு காலக்கெடு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதனை நீட்டிப்பு செய்து தங்கள் பயிரிட்டுள்ள எள் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மேலும் பாதிக்கப்பட்ட எள் சாகுபடியினை வேளாண்மை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் உரிய கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.