• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிங் ரோடு இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார்

ByVasanth Siddharthan

Mar 13, 2025

திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ரிங் ரோடு அமைக்கும் பூமி பூஜை பணியினை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார்.

திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் இருந்து வெள்ளோடு பிரிவு வரை 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள திண்டுக்கல் சுற்றுச்சாலை ரிங் ரோடு அமைக்கும் பணி சிலுவத்தூர் ரோடு, ஒத்தக்கடை அருகில் பூமி பூஜையை திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் துவங்கி வைத்தார்.

இந்த ரிங் ரோடு ஆனது திண்டுக்கல் -திருச்சி சாலை முள்ளிப்பாடி பிரிவில் ஆரம்பித்து எம்.எம்.கோவிலூர், நடுப்பட்டி வழியாக சிலுவத்தூர் ரோடு, ஒத்தக்கடை, லட்சுமி நாயக்கன் பட்டி,ஆர்.எம்.டி.சி காலனி, ரெண்டலப்பாறை, ஏ.வெள்ளோடு வழியாக மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலையாக வருகிறது.
மேலும் இந்த நிகழ்வில் திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.